சித்திரை வருடப்பிறப்பும்
தமிழர் பண்டிகையை கொண்டாடும் முறைமையும்
ஒரு வருடத்திலுள்ள பன்னிரண்டு மாதங்களும் சுழற்சியில் மேடராசி முதல் மீனம் என்ற இராசி ஈறாக உள்ள 12 இராசிகளிலும் சஞ்சரிக்கும். கிரகங்களின் நடு நாயகமாக அமைந்த சூரியன் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதலாம் திகதி, கடைசி இராசியாகவுள்ள மீன இராசியிலிருந்து, முதலாவது வீடாகிய மேட ராசிக்குள் பிரவேசிக்கும் நாளே சித்திரை வருடப்பிறப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
உலகில் நடைபெறும் சகல நிகழ்வுகளுக்கும், சூpரயனே முதல் சக்தியாக இருக்கின்றான்.
உலக படைப்பு ஆரம்பித்த நாளென தமிழர்களால் நம்பப்படும் இச் சித்திரை முதல் நாளையே நாம் சித்திரை வருடப்பிறப்பு நாளாகக் கொண்டாடுகிறோம்.
தமிழ் இந்துக்களுக்கு இவ்வருட ஆரம்ப நாள் மிகவும் மங்களகரமான நாளாகும். முக்கிய பண்டிகை ஆகும். இந்நாளில் எம்மவர்கள் தமது பாவங்கள், தோஷங்கள், துன்ப துயரங்கள் நீங்கவும், அடுத்துவரும் நாட்;கள் அதாவது புதிய ஆண்டு நல்ல வகையில் அமைய வேண்டும் என எதிர்பார்த்தும் அந்நாளில் சூரிய பகவானுக்கு பாற்பொங்கல் படைத்தும், நைவேத்தியங்கள் வைத்தும் பக்தி பூர்வமாக வழிபாடு செய்வர். அத்தோடு இவ்வருட முதல் நாளன்று தத்தம் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டும், ஆலயங்களுக்குச் சென்று பிரார்த்தனைகள் செய்தும், மகிழ்ச்சியாக வருடப் பிறப்பைக் கொண்டாடுவர். சித்திரை வருடப்பிறப்பு என்கிற பண்டிகையானது தமிழர்கள் பாரம்பரியத்தில் முக்கிய இடத்திலுள்ள பண்டிகை என மதிக்கப்படுகிறது என்றால் மிகையாகாது.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற மரபிற்கமைய இந்நாளில் கடந்தகால வாழ்வுப் போதில் தாம் தவறிய விடயங்கள், மறந்து பேணாதிருந்ததுமான செயல்களை மீளப் பார்த்து புதுக்கி, புதிய விடயங்களை ஆரம்பிப்பதிலும் மிகக் கவனமாயிருப்பர். இவற்றுக்கெல்லாம் பஞ்சாங்கம் பார்த்து, சோதிட வாக்கியங்களை அனுட்டித்தும் இந்நாளைத் தொடங்குவர். முக்கியமாக வருடம் பிறக்கும் நேரத்தையும், விஷ_ புண்ணிய காலத்தையும் பஞ்சாங்கத்திலே பார்த்து, அங்குள்ள அறிவுறுத்தல்களின்படி கருமங்களை ஆற்றுவது தொன்றுதொட்டு நடைமுறைப்படுத்தி வரும் நம் முறைமையாகும்.
திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்பதாகிய ஐந்து அம்ஷங்களைக் கொண்டதே பஞ்சாங்கம் எனும் சோதிட நூலை பஞ்சாங்கத்தை முன்வைத்தே தமிழர்கள் தம் வாழ்வியற் கருமங்கள், சடங்கு சம்பிரதாயங்களை தெய்விகமாக நடத்துவதில் கரிசனையாய் இருப்பர்.
உதாரணமாக புதுவருட தினத்தில் கடைக்கொள்ள வேண்டிய முக்கிய கருமங்களான, மருத்து நீர் வைத்து நீராடுவது முதல், புத்தாடை அணிதல், சூரிய பொங்கல் செய்து படைத்தல் சிறப்பு கோயில் வழிபாடு, சங்கிராந்தி தீர்த்தமெடுத்தல் போன்றன குறிப்பிடத்தக்கனவாகும்.
புதிய வருடப் பிறப்பையொட்டி பஞ்சாங்கம் குறிப்பிடும் வேளையில் வீடுகளில் உணவுகள் சமைத்து இனிய பண்டங்கள், பலகாரங்கள், பழவகைகளோடு மகிழ்ந்து உணவருந்துதல் இந்நாளில் சிறப்பாக இடம்பெறும். குறிப்பாக வேப்பம் பூ பச்சடியை தயாரித்தும், வேப்பம் பூ வடகம் சேர்த்தும் மதிய போசனம் செய்யும் மரபு தமிழர்கள் மத்தியில் காலங்காலமாக இருந்து வரும் வழக்காகும்.
உண்மையில் புதுவருட போசனத்தில் அறுவகைச் சுவைகளும் சேர்க்கப்பட்ட உணவுகள் இடம்பெற வேண்டும் என்ற தாற்பரியத்தின் அடிப்படையில் புதுவருட உணவுமுறை அமைய வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
மேலும் தமிழர்க்குரிய இத்தெய்வீகத் தினத்தில் இவ்வருடம் “சுபகிருது” எனப் பெயரில் அமைந்து, வகுக்கப்பட்ட அறுபது வருடச் சுற்றில் ஆவது மிகக் குறிக்கப்பட்டுள்ள வருடம் என்பதும் அறிந்து வைத்திருக்கத்தக்கதாகும். அந்த வகையில் இப்பெயரிலமைந்த ஆண்டு இறுதியாக, கடந்த வரிசையில் சுபகிருது வருடம் 1902 – 03 க்கு பிறகு 1962 – 63 இல் இந்த நாமத்தோடு புது வருஷம் அமைந்தது. 60 வருடச் சுற்று என்பது இதுதான்.
தமிழர் தம் வருடப் பிறப்பு நாள் நிர்ணயம் பற்றி நோக்கும் போது, வாக்கிய பஞ்சாங்க, திருக்கணித பஞ்சாங்கங்களின் அடிப்படையில்,
2022 சித்திரை முதல் நாளில் பிறக்கும் “சுபகிருது”
இந்த ஆண்டு “சுபகிருது” எனப் பெயரையுடையதாகக் காட்டப்பட்டுள்ளது. தமிழர் நாட்குறிப்பின் படி சித்திரைத் திங்கள் வியாழக்கிழமை 7.50 மணி, காலை நாடி 4 விநாடி 23க்கு புதிய வருடம் 14.04.2022 ஆந் திகதியில் பிறக்கிறது. அந்நாள் திரயோதசி திதியில் பூரநட்சத்திரத்தில் வருவதையும் விஷ_ புண்ணியகாலம் 14.04.2022 வியாழன் அதிகாலை 3.50 மணிமுதல், முற்பகல் 11.50 வரை அமைந்திருப்பதையும், பஞ்சாங்கம் குறித்துத் தருவதைக காணமுடிகிறது.
விஷ_ புண்ணிய காலத்திலேயே மக்கள் எழுந்து மருத்து நீர் வைத்து நீராடிய பின்பு நாள் கருமங்கள் கடமைகளை ஆற்ற வேண்டும் என்றும் நல்ல சிவப்பு அல்லது மஞ்சள் நிறமுடைய பட்டாடை அல்லது சிவப்புக் கரையோடு அமைந்த வேட்டி, சேலை அணிதல் வேண்டுமென்றும் கூறுகிறது.
தாழம்பூ, தாமரை, மாதுளை, துளசி, விஷ்ணு கிராந்தி, சீதேவியார் செழுங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திற்பலி, சுக்கு ஆகிய பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதே மருத்து நீர்.
இம் மருத்து நீரை யாவரும் சோதிட நூல் அறிவுறுத்திய பிரகாரம் அந்தந்த உடல் உறுப்புக்களில் வைத்து ஸ்நானஞ் செய்யவேண்டுமென்பது கூட விதிக்கப்பட்டிருப்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
சிறப்பாக “சுபகிருதி வருஷ” வாக்கிய பஞ்சாங்க குறிப்பின் பிரகாரம் இப்புதுவருடத்தின் பலன்கள் பற்றிய கூறியுள்ள பாடல் நினைவிற் பதிக்கத்தக்கது.
பாடல் பின்வருமாறு :-
ஆயுங் கலியுகத் தையாயிர நூற்றிருபத்து நான்குடன்
ஏயுங் சுபகிருது வருஷத்திற் சேருமியல் புணர்த்தி
தூய வுலகின்ற பஞ்சாங்க மாகத்தொகுக்க வருள்
ஈயும் பெ
முன்னாள் இ.ச.க. அமைச்சின் துணைப் பணிப்பாளர்,
கலாபூஷணம், புலவர்
M.S. Sri Thayalan (0714 312070)
No. 24, Ebernezer Place,
Dehiwala.